Pre School & Daycare Centre

Sunday, September 4, 2016

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் கொடி கொடித்தம்பத்தில் ஏற்றப்பட்டு மகோற்சவ பெருவிழா ஆரம்பமானது.
வரும் 10.09.2016 சனிக்கிழமை அன்று வேட்டைத்திருவிழாவும், 11.09.2016 ஞாற்றுக்கிழமை சப்பரத்திருவிழாவும், 12.09.2016 திங்கட்கிழமை தேர்திருவிழாவும், 13.09.2016 செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
இன்று (04.09.2016) ஞாயிற்றுக்கிழமை திருதியை திதியும் அத்த நட்சத்திரமும் கூடிய கொடியேற்ற நன்னாளில் முன்னிரவு 8.00 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பை ரதம் வெள்ளோட்டம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அனைவரும் வருகைதந்து நரசிங்கப்பெருமானின் அருள்பெற ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.













கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment